மலேசியாவில் லோரி மோதியதில் பெண் யானை பலி..!

0
526
Elephant kills lady Malaysia, malaysia tamil news, malaysia news, malaysia, Elephant kills,

{ Elephant kills lady Malaysia }

மலேசியா: இங்கு ஜாலான் மெர்சிங்-கோத்தா திங்கி சாலையில் காட்டிலிருந்து பதட்டத்தில் ஓடி வந்த பெண் யானை ஒன்று, சாலையில் வந்து கொண்டிருந்த டிரெய்லர் லோரியால் மோதப்பட்டு அங்கேயே பரிதாபமாக பலியாகியுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் பாந்தி பாதுகாக்கப்படும் காட்டு பகுதியின் அருகில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக ஜொகூர் மாநில வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் இலாகா இயக்குநர் ஜமாலுன் நசீர் கூறியுள்ளார்.

அச்சாலையை யானைகள் கூட்டம் கடந்துக் கொண்டிருந்ததைக் கண்ட கார் ஓட்டி ஒருவர், தனது காரின் ‘ஹெட் லைட்களை’ அடித்ததால், அந்த யானைகள் கலவரமடைந்தன என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

“அந்த யானைகளில் ஒன்றான அந்தப் பெண் யானை, அந்த அதிர்ச்சியில், சாலையில் வந்துக் கொண்டிருந்த அந்த டிரெய்லரை நோக்கி ஓடியுள்ளது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே 10 வயது நிரம்பிய அந்தப் பெண் யானை இறந்து விட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

சாலையை விலங்குகள் கடந்துச் செல்லும் போது, அவற்றை நோக்கி ‘ஹெட் லைட்டுகளை’யோ அல்லது ஹாரன்களை அடிக்க வேண்டாம் என்று அவர் வாகனமோட்டிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் அந்த டிரெய்லர் லோரி ஓட்டுநருக்கு எவ்வித காயமும் நேரவில்லை என்று கோத்தா திங்கி ஓசிபிடி சூப்ரீண்ட். அஸ்மோன் பாஜா தெரிவித்துள்ளார்.

Tags: Elephant kills lady Malaysia

<< RELATED MALAYSIA NEWS>>

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

<<Tamil News Groups Websites>>