மதுபான நிலையத்தில் வேலை செய்தவர் சடலமாக மீட்பு

0
508
death inquiry police informed family leader dead hospital Rajas Garden

(death inquiry police informed family leader dead hospital Rajas Garden)

யாழ்ப்பாணம் – ராசாவின் தோட்டம் வீதியிலுள்ள மதுபான நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார் என மரண விசாரணை மற்றும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலையைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி இடைக்காடுப் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கௌரீசன் (38) என்பவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மதுபானசாலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராப் பதிவில் குடும்பத் தலைவர் நெஞ்சை இறுகப் பிடித்தவாறு வீழ்வது பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“குடும்பத் தலைவருக்கு மாரடைப்பு ஏறபட்டுள்ளது. தகுந்த முதலுதவி வழங்கப்படாத்தால் அவர் உயிரிழந்துள்ளார்” என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

(death inquiry police informed family leader dead hospital Rajas Garden)

More Tamil News

Tamil News Group websites :