இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை

0
1240
Arunesh Thangaraja stabbed death Mitcham

(Arunesh Thangaraja stabbed death Mitcham )
இலங்கையிலிருந்து இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம் பகுதியில் உள்ள வீதியில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வெட்டுக்காயங்களுடன் கிடந்தார்.

அவரை மீட்டு உயிரைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சித்த போதும், அந்த இடத்திலேயே மரணமானார்.

ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார், இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தெற்கு லண்டனில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :