2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது கடந்த சனிக்கிழமையுடன்(மே 19) நிறைவுக்கு வந்தது. விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.2018 Cannes film festival awards
இந்த திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்துக்காக வழங்கப்படும் Palme d’Or விருது, “Une affaire de famille” எனும் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. இத்திரைப்படத்தை இயக்கிய ஜப்பானிய இயக்குனர் Hirokazu Kore-Eda அவ் விருதினை பெற்றுக்கொண்டார்.
இதில் “Dogman’ எனும் படத்தில் நடித்த இத்தாலி நடிகர் மார்செல்லோ பான்ட்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
“அக்யா’ படத்தில் நடித்த கஜகஸ்தான் நாட்டு நடிகை Samal Esljamova க்கு சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டது.
இது தவிர சிறப்பு Palme d’or விருது பிரெஞ்சு-சுவிஸ் இயக்குனர் Jean-Luc Godard க்கு கிடைத்தது. அதேபோன்று, Grand Prix விருது, BlacKkKlansman திரைப்படத்தை இயக்கியிருந்த, அமெரிக்க இயக்குனர் Spike Leeக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
- தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி