கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

0
560
20 Movie Story leaked Fans Expectation,20 Movie Story leaked Fans,20 Movie Story leaked,20 Movie Story,20 Movie

(20 Movie Story leaked Fans Expectation)

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ”2.0” படத்தின் கதை, சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது, ரஜினிகாந்த் – அக்‌ஷய் குமார் – ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கதை இது தான் என இணையங்களில் சில தகவல்கள் வைரலாகப் பரவி வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் படம் ”2.0”. இப் படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது.

ம‌ேலும், ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ‌ஷங்கருக்கு திருப்தி இல்லை என்பதால், இப்போது மீண்டும் கிராபிக்ஸுக்காக கொடுத்திருக்கிறார்கள். எனவே படம் தயாராகி திரையரங்குகளை அடைய 2019 ஆகி விடும் என்கிறார்கள்.

இந்நிலையில், ”2.0” படத்தின் கதை என்று ஒரு கதை தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.

அதாவது, செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன. சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்து விட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது. அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கின்றது அந்த வில்லன்.

மேலும், உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை. இந்தப் பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறார் வசீகரன்.

அந்த ரோபோவுக்கும் பறவை வில்லனுக்குமான மோதல் தான் படம் என்கிறார்கள். பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்‌‌ஷய் குமார்.

படத்தின் நீளம் வெறும் 100 நிமிடங்கள் தான் என்பதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகனை இருக்கை நுனியிலேயே இருக்க வைத்திருக்கும் என்கிறார்கள்.

அத்துடன், படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். இப்படத்தைப் பார்த்தால், முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படுமாம்.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-20 Movie Story leaked Fans Expectation

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை