மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 தனிவீடுகள் கையளிப்பு

0
533
Hundreds houses handed affected people landslides Hatton Bhoolpang

(Hundreds houses handed affected people landslides Hatton Bhoolpang)

ஹட்டன் பூல்பேங் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘கந்தையா புரம்’ என்ற 20 தனி வீடுகள் கொண்ட தொகுதி இன்று (20) கையளிக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

(Hundreds houses handed affected people landslides Hatton Bhoolpang)

More Tamil News

Tamil News Group websites :