காரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்

0
559
healthy rice sweets

(healthy rice sweets)

தேவையான பொருட்கள்

அரிசி- 1/4 கிலோ
சாமை – 150 கிராம்
குதிரைவாலி – 100 கிராம்
உளுந்து – 200 கிராம்
கடலைப் பருப்பு – 50 கிராம்
பெரிய வெங்காயம்-2
பச்சைமிளகாய் (நறுக்கியது) – தலா 1,கொத்தமல்லி
பெருங்காய்த் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி  அரிசி, உளுந்து ஆகியவற்றை  ஒன்றாகப் போட்டு, ஊறவைத்து  இட்லி  மாவுப்  பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

குழிப்பணியாரம் செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சரியான பதத்திற்கு மா வந்தவுடன்  சிறிது சிறிதாக ஊற்றி எடுக்க வேண்டும்.

சுவையான குழிப்பணியாரம் தயார்.

குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி  ஆகியவை  ஒன்று  சேர்வதால்  இந்தப்  பணியாரத்தைச் சாப்பிடும்போது,  உடல்  மந்தத்தன்மை  அடையாது.  உடலுக்குத்  தேவையான ஆற்றல் கிடைக்கும்.  முழுக்க  ஆவியிலும்  வேகாமல், எண்ணெயிலும் பொரிக்கப்படாமால் செய்யப்படுவதால், சத்துக்கள் சிதையாமல் உடலுக்குக் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்தப் பணியாரம் மிகவும் பிடிக்கும். தேவைப்பட்டால், காரச்சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

tags:-healthy rice sweets
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!