ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அம்பலம்…!

0
485
freedom party president candidate name leek minister amaraweera

freedom party president candidate name leek minister amaraweera
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில், நாட்டின் நன்மை கருதி விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மஹாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர், ஊடகவியாலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சி என்ற அடிப்படையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்பதோடு, குறித்த யோசனை முன்வைக்கப்பட்டால், மத்திய குழு அது தொடர்பில் ஆராயும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதை விடுத்து, நாட்டின் நன்மை குறித்து செயற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைவரினதும் நம்பிக்கையை வென்ற, உலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார்.

அதுபோல, ஊழல் மோசடிக்கு எதிரான, தூய்மையான அரசியல்வாதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
freedom party president candidate name leek minister amaraweera

More Tamil News

Tamil News Group websites :