நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

0
1094
Najib 20 year uninterrupted box, malaysia, malaysia tamil news, malaysia news, Najib,

{ Najib 20 year uninterrupted box }

மலேசியா: கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல், சாவியும் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் வீட்டு இரும்புப் பெட்டி ஒன்றை ஆகக் கடைசியாக போலீஸ் அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர். ஆனால், அதனுள் அப்படி என்ன இருந்தது என்று ஆவலோடு பார்த்த போது நஜிப் மற்றும் ரோஸ்மாவின் திருமணச் சான்றிதழ் மிகப் பத்திரமாக இருந்துள்ளது.

மேலும் சில ஆவணங்களும் கொஞ்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் இருந்தன என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

கடந்த இரண்டு நாள்களாக இந்த இரும்புப் பெட்டியைத் திறப்பதற்காக போலீசார் கடும் சிரமப்பட்டனர். இதற்கென வரழைக்கப்பட்ட சாவி தயாரிப்பாளரின் முயற்சியும் பயனளிக்கதவிடுத்து முடிவில் கிட்டத்தட்ட அந்த இரும்புப் பெட்டி உடைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

1எம்டிபி நிறுவன் நிதி முறைகேடு தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக நஜிப்பிற்குச் சொந்தமான இல்லங்கள் உள்பட ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

ஏராளமான ஆவணங்களையும் நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஏராளமான ஹேண்ட் பேக்குகளையும் போலீசார் மீட்டனர். கிட்டத்தட்ட 284 ஹேண்ட் பேக் பெட்டிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் நகைப் பெட்டிகள் விலையுயர்ந்த கைக் கடிகாரங்கள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.

Tags: Najib 20 year uninterrupted box

<< RELATED MALAYSIA NEWS>>

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

<<Tamil News Groups Websites>>