மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல் : நடுரோட்டில் அடிதடி!

0
729
MDMK struck imiddle sudden conflict Tamil party

MDMK struck imiddle sudden conflict Tamil party

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் திருச்சி வந்தனர், அவர்களை வரவேற்க இரு கட்சியின் தொண்டர்களும் விமான நிலையத்தின் முன் கூடியிருந்தனர், அப்போது மதிமுகாவினர் வைகோவை வாழ்த்தியும், நாம் தமிழர் கட்சியினர் சீமானை வாழ்த்தியும் கோஷமிட்டனர், பின்னர் வைகோ விமானத்தில் இருந்து இறங்கி வந்து அவரது காரில் ஏறி சென்றார், பிறகு சீமானின் கார் சீமானை ஏற்றி செல்வதற்கு வைகோவின் கார் நின்ற அதே இடத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் அப்போது இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது, பின்னர் இரு கட்சியினர் கையில் இருந்த கொடி கம்பால் தாக்கிக்கொண்டனர், அதில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அதில் ஒருவர் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்தார், பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்,

இச்சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More Tamil News

Tamil News Group websites :