கர்நாடக முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் எடியூரப்பா

0
600
Karnataka Legislative Assembly announced resignation before vote

Karnataka Legislative Assembly announced resignation before vote

இந்திய கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில், அதற்கு முன்பாக தனது முதல்வர் பதவியை எடியூரப்பா இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் போதிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை காலை கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பா சுமார் 56 மணி நேரத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

சட்டப்பேரவையில் தனது இராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா, ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து,  இராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதன் மூலம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 15ஆம் திகதி மாலை தொடங்கிய தேர்தல் பரபரப்பு சனிக்கிழமை (19ஆம் திகதி) மாலை முடிவுக்கு வந்துள்ளது.

Karnataka Legislative Assembly announced resignation before vote

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :

Karnataka Legislative Assembly announced resignation before vote