‘போர்ட் சிட்டி’ முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்

0
472
Chinas route attempt considered destination Sri Lanka Colombo Port City

(Chinas route attempt considered destination Sri Lanka Colombo Port City)
சீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஒரு இலக்கு என கருதப்படுகிறது. கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றமானது தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 25 வருட நீண்ட திட்டம் என்றாலும், அபிவிருத்தி வளர்ச்சி வேலைகள் வேகத்தில் நகர்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான சீனக் குவான்ஷி உற்பத்தி கண்காட்சி மற்றும் சீன குவான்ஸி வர்த்தக நாமம் (brand) பட்டுப்பாதை தொடர் கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.

சீனா அதன் ஆதரவை தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கி வருகிறது. பல நூற்றாண்டுகளாக சீனாவுக்கும் இலங்கைக்கும் வலுவான உறவுகள் உள்ளன.

சீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” என்ற முன்முயற்சியை இலங்கை ஆதரிக்கின்றது. இந்த முன்முயற்சியில் இலங்கையானது ஒரு முக்கிய இடமாகக் கருதப்படுகின்றது.

இன்று இலங்கையில் நம்பிக்கையான சீன முதலீட்டு சாத்தியங்கள் உள்ளன. சீனாவின் ஓரே பாதை ஒரே முயற்சி, இலங்கையின் ஒரு இலக்கு என கருதப்படுகிறது.

கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம் தெற்காசியாவில் இலங்கையின் தலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு 25 வருட நீண்ட திட்டம் என்றாலும், அபிவிருத்தி வளர்ச்சி வேலைகள் வேகத்தில் நகர்கின்றது. இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு சீனா இலங்கைக்கான மொத்த இருதரப்பு வர்த்தகம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

கடந்த பத்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 363 சதவீத அதிகரிப்பாகும். அதாவது 965 மில்லியன் அமெரிக்க டொலர்கள். 2016 – 2015 ஆம் ஆண்டுகளில் சீனா இலங்கைக்கான மொத்த இருதரப்பு வர்த்தகம் 04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தின் வர்த்தக திணைக்கள பணிப்பாளர் டையோ வேய்ஹங் தெரிவித்தாவது: “சீனாவின் ஓரே பாதை ஒரே முயற்சி, இலங்கை மூலோபாயத்தின் அடிப்படையில் ஒரு மையமாக உள்ளது.

சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தின் அரசாங்கத்தால், கொழும்பில் நடத்தும் மிகப்பெரிய தயாரிப்பு கண்காட்சி ஆகும்.

இந்த பிராந்தியத்திலிருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் குவாங்சி இலங்கையுடன் இடையிலான வழி மார்க்கமான உறவை கொண்டிருந்ததாக முந்தைய சீன பயணிகள் பதிவு செய்துள்ளனர்.

இப்போது நாம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கின்றோம். கடந்த சில ஆண்டுகளாக, சீனா – இலங்கை மூலோபாய பங்காளித்துவம் பிரதான பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது.

முன்னரை விட நாம் இப்போது நெருக்கமாக இருக்கின்றோம். குறிப்பாக எங்கள் சீனாவின் ஓரே பாதை ஒரே முயற்சி, இலங்கையில் மூலோபாயம் ஒரு மையமாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் செழிப்பைக் கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நாட்டையும் இந்த மக்களையும் நாம் நம்புகின்றோம்.
எனவே இலங்கையின் நிதி வாய்ப்புக்களைப் பற்றி எமக்கு எந்த கவலையும் இல்லை. கடந்த ஆண்டு சீனா – இலங்கை இருதரப்பு வர்த்தகம் 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது என்று வேய்ஹங் கூறினார்.

 

(Chinas route attempt considered destination Sri Lanka Colombo Port City)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :