காளி : திரை விமர்சனம்..!

0
883
Kaali Movie Review Tamil Cinema,Kaali Movie Review Tamil,Kaali Movie Review,Kaali Movie,Kaali

(Kaali Movie Review Tamil Cinema)

தன்னைப் பெற்ற தாய், தந்தையைக் கண்டுபிடிப்பதற்காக போராடும் இளைஞனின் பயணமே காளி படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒரு அம்மா-மகன், ஒரு மாடு, ஒரு பாம்பு வருகிறது.

மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என்ற குணமுடைய விஜய் ஆண்டனி, அதையே தனது மருத்துவமனையில் புணிபுரிபவர்களுக்கும் போதிக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி செயழிலந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தனது அம்மாவைக் காப்பாற்ற தனது கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக விஜய் ஆண்டனி அவரது அப்பாவிடம் கூறுகிறார்.(Kaali Movie Review Tamil Cinema)

ஆனால் விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்றும், அவரை ஆசிரமம் ஒன்றில் இருந்து தத்து எடுத்து வந்ததாக விஜய் ஆண்டனியின் அப்பா கூறுகிறார். இதையடுத்து தனது கனவில் வருவது யார்? தன்னை பெற்ற அம்மாவா? அவர் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறிய தான் இந்தியாவுக்கு போய் வருவதாக தனது வளர்ப்பு பெற்றோரிடம் கூறிவிட்டுச் செல்கிறார்.

இந்நிலையில், இந்தியா வரும் விஜய் ஆண்டனி தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். பின்னர் தனது தந்தை யார் என்பதை தேடி செல்கிறார். அவருக்கு துணையாக யோகி பாபு வருகிறார். அவரது அப்பாவை தேடிச் சென்ற அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இலவச சிகிச்சை செய்வதாகக் கூறி அனைவரது ரத்தத்தையும் எடுத்து, அவர்களது டி.என்.ஏவை, தனது டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

இதில் அந்த ஊர்த் தலைவரான மதுசூதனன் தான் தனது தந்தையாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அவரது கதையை கேட்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி பற்றிய கதையையும் கேட்கிறார். இந்த நிலையில், அதே ஊரில் சித்த மருத்துவராக வரும் அஞ்சலிக்கு, விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது.

கடைசியில் விஜய் ஆண்டனி தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? விஜய் ஆண்டனியின் அம்மா யார்? விஜய் ஆண்டனியின் கனவு முழுமை அடைந்ததா? விஜய் ஆண்டனி – அஞ்சலி இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அந்த வகையில், 4 வித்தியாசமான கெட்-அப்களில் வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பு எப்போதும் போல ரசிக்கும்படியாகவே இருக்கிறது. 4 பரிணாமங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சித்தா மருத்துவராக அஞ்சலியின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக ரசிக்கும்படி வந்திருக்கிறது. சுனைனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதாவும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

மேலும், காமெடி காட்சிகளில் யோகி பாபு ஸ்கோர் செய்திருக்கிறார். மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் கொடுத்த கதாபாத்தை மெருகேற்றியிருக்கின்றனர்.

ஒரு கனவு, அதில் வருவது யார் என்பதை அறிய இந்தியா வரும் விஜய் ஆண்டனி, அவரது அப்பாவை தேடுகிறார். அதனை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. படத்தின் கதை, கேட்க வித்தியாசமாக இருந்தாலும், அதனை திரையில் சரியாக காட்டவில்லையோ என்று யோசிக்க வைத்துவிட்டார் கிருத்திகா.

அத்துடன், 4 கெட்-அப்புகளில் விஜய் ஆண்டனி, 4 கதாநாயகிகள் என படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அவரது முதல் படத்தில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லை என்பது வருத்தமே.

பின்னணி இசை, பாடல்களில் விஜய் ஆண்டனி மிரட்டியிருக்கிறார். குறிப்பாக அரும்பே பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.(Kaali Movie Review Tamil Cinema)

ஆக மொத்தத்தில் ”காளி” ஏமாற்றம் தான்…!

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!

Tags :-Kaali Movie Review Tamil Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது!