பா.ஜ.க. அரசின் நான்காம் ஆண்டு நிறைவு- ஒடிசாவில் 26ஆம் திகதி பிரதமர் மோடி பேசுகிறார்

0
433
addressed gathering senior leaders Congressparty indiatamilnews

Indian Prime Minister Modi speak public meeting Odisha

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆகும் நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி பேசுவுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

எதிர்வரும் 26ஆம் திகதியுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடையும் நிலையில் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

ஒடிசாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. அண்மையில் நடைபெற்ற பிஜப்பூர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநில சட்டசபை மற்றும் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்டாக் நகரில் மஹாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் எதிர்வரும் 26ஆம் திகதி பிரதமர் பேசவுள்ள பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Indian Prime Minister Modi speak public meeting Odisha

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :