பிரெஞ்சு ரயில் வேலைநிறுத்தங்கள் இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்வதனால், பயணிகள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். people face problem-SNCF protest
ரயில்வே ஊழியர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று பிரெஞ்சு இரயில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் இவ் வேலை நிறுத்தங்கள் கடந்த திங்கட்கிழமை போல மோசமாக பாதிக்கப்படாது. கடந்த திங்கட்கிழமை பல ரயில்கள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டதுடன், மற்ற ரயில் சேவைகளும் தாமதமாக இயங்கின.
TGV ரயில்களில் பாதிக்கும் மேற்பட்டன இயங்கும் எனவும் 5 TER களில் 2 இயங்கும் எனவும் Intercity மெயின்லைன்ஸ் விமானங்கள் இயங்கும் எனவும் SNCF தெரிவித்துள்ளது.
RER ரயில்களில், வழக்கமான சேவைகளில், பாதிக்கும் மேலான ரயில் சேவைகள் பரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும்.
இருப்பினும் பகுதிகளைப் பொறுத்தே ரயில் சேவைகள் சேவையில் ஈடுபடும். எனவே பயணிகள் உங்கள் பகுதி ரயில் சேவைகள் இயங்குகின்றனவா என்பதை SNCF உடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
**Most Related Tamil News**
- டுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி!
- “என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை
- பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்!