இளம் தந்தை தாக்கி படுகொலை : வெல்லவாயவில் சம்பவம்

0
254
police arrested beaten killed 80yearold mother fight indiatamilnews

(21 old boy killed wellawaya)
கூரிய ஆயுதமொன்றால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று வெல்லவாயப் பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது.

வெல்லவாய – சிறிபுரகம பிரதேசத்திலிருந்து, கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிய நிலையில் கிடந்த சடலமொன்று, பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் எத்திலிவேவ பிரதேசத்தைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான 21 வயதுடையர், எனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ள​தோடு, குறித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :