பிரெஞ்சு காவற்துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு!

0
600
Increase French police count decision

பிரான்ஸில் இவ் வருடத்தில், காவல்துறை பணிக்கு 8,000 வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.Increase French police count decision

மே 14 ஆம் திகதி திங்கட்கிழமை, உள்துறை அமைச்சுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய SGPN துறை அதிகாரி Eric Morvan, 8,000 வீரர்களை மேலதிகமாக இவ் வருடத்தில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளார். பரிஸில் சனிக்கிழமை இரவு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. இதன் பின்னரே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் Gerard Collomb இடம் இவ் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் இதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக Eric Morvan தெரிவிக்கும் போது, ‘காவல்துறை வீரர்களை அதிகரிக்க வேண்டிய போதிலும், அரசு தரப்பில் சிறு தயக்கம் ஏற்பட்டுள்ளது’ என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும், பிரெஞ்சு தேசிய காவல்துறையில், 3,000 அமைதிப்படையினரும், 2,000 உதவி காவல்துறையினரும், 650 பொது மக்கள் குழு அதிகாரிகளும், 1,500 தொழில்நுட்ப பிரிவு படையினரும், 70 காவல்துறையினர் மற்றும் 56 மேலதிகாரிகளும் கோரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**