வெள்ளவத்தை மக்கள் அச்சத்தில்..! : முள்ளிவாய்கால் நினைவேந்தலா காரணம்?

0
693
sudden police ordinance wellawatte today

(sudden police ordinance wellawatte today)
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவி பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி வடக்கில் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்வை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்காக வடக்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆர்த்மார்த்தமான இந்த நிகழ்வை அரசியலாக்கவும் சில விஷமிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

இது ஒருபுறமிறக்க, அரசாங்கம் இந்த நிகழ்வை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என மறைமுக செயற்பாடுகனை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை கடந்த மாதம் முல்லைத்தீவு நீதிமன்றம் முல்லிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க கூடாது என உத்தர பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் முல்லிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக வடக்கு மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் இன்று காலை முதல் பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

திடீரென மேற்கொள்ளப்படும் இந்த பொலிஸ் பதிவால் வெள்ளவத்தையில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அரசாங்கம் என்ன காரணத்திற்காக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :