{ Prime Minister claim prosecuted Najib }
மலேசியா: இன்னும் குறுகிய காலத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது வழக்கு தொடுக்கப்படும் என நம்பப்படுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் முடிவைப் பொறுத்தே நஜீப்பிற்கு சிறையில் தண்டனை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
வழக்கு இன்றி, நாங்கள் விசாரணைகள் இன்றி நஜீப்பை தடுத்து வைக்க முடியாது என துன் மகாதீர் கூறியதாக ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நம்பிக்கை கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் 1எம்.டி.பி முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என துன் மகாதீர் வாக்குறுதி அளித்திருந்துள்ளார்.
தன்னைத் தொடர்புபடுத்தி கூறப்பட்டு வந்த 1எம்.டி.பி முறைகேட்டை நஜீப்பும் தொடக்கத்திலிருந்து மறுத்து வந்துள்ளார்.
தற்போது, நஜீப் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்னர் அது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக, அனைத்து அமைச்சுகளிலும் எவ்வித ஆவணங்களும் வெளியே கொண்டு போகக்கூடாது அல்லது அழிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் துன் மகாதீர் இதற்கு முன்பு கூறியிருந்துள்ளார்.
Tags: Prime Minister claim prosecuted Najib
<< RELATED MALAYSIA NEWS>>
*ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் – துன் மகாதீர்!
*ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி
*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!
*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!
*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!
*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!
*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்
*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?
*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!
<<Tamil News Groups Websites>>