அவுஸ்திரேலியர் படைத்த சாதனை

0
193

Australian scales mountain

உலகின் ஏழு கண்டங்களில் உள்ள ஆக உயர்ந்த மலைச் சிகரங்களை ஆகக் குறைந்த நேரத்தில் அடைந்துள்ளார் அவுஸ்திரேலியர் ஒருவர்.

36 வயது ஸ்டீவ் ப்ளேன் 117 நாட்களில் அந்த சாதனையைச் செய்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,850 மீட்டர். அதை அடைவதற்கான வழியில் பல முகாம்கள் உள்ளன. 8000 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி முகாமிலிருந்து ஏழு மணி நேரத்திற்குள் அவர் சிகரத்தை அடைந்தார்.

அவருடைய சாதனையை இமய மலையேற்ற வழிகாட்டி நிறுவனத்தின் அதிகாரி உறுதி செய்தார்.

அவருடைய மலையேற்றத்தைப் பற்றி முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. முன்னர், போலந்தைச் சேர்ந்தவர் ஏழு சிகரங்களை 126 நாட்களில் அடைந்தார்.