(Kanaa Movie Motion poster released)
நடிகர் சிவகார்த்திகேயன் அதிகார பூர்வமாக தயாரிப்பாளராகி, தனது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இப் படத்தின் டைட்டில் சற்று முன்பு அறிவிக்கப்பட்டு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, ”கபாலி” படத்தில் நெருப்புடா பாடலை பாடி பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகராக இருந்து வந்த அவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். இந்தப் படத்தை அவரது நண்பர் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில், தர்ஷன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்க, சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஓர் இளம்பெண் எதிர்கொள்ளும் சிரமங்களே இந்தப் படத்தின் ஒன்லைன் கதை.
இப்படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்ட நிலையில், டைட்டிலை இன்று தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அந்த வகையில், இப்படத்திற்கு ”கனா” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ”கனா” படத்தின் மோஷன் போஸ்டரும் சற்று முன்பு வெளியாகியுள்ளது. படத்தின் கதையைச் சொல்லும் விதமாக இந்த மோஷன் போஸ்டர் உருவாகியுள்ளது. பெரிய கனவைக் காணும் பெண்ணுக்குப் பின்னால் அவளது அப்பா எப்படி பங்காற்றுகிறார் என்பது படத்தின் ஒரு கோணமாக இருக்கக்கூடும்.
மேலும், ”கனா” டைட்டிலுக்கு கீழே ”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என கேப்ஷனும் போடப்பட்டுள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Video with Photo Credit : Sony Music India
<MOST RELATED CINEMA NEWS>>
* குழுவினரிடம் பொரிந்து தள்ளிய ஐஸ்வர்யா ராய் : காரணம் இது தானாம்..!
* பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!
* பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!
* சூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..!
* அன்னையர் தின வாழ்த்து கூறிய ஸ்ருதி ஹாஸனுக்கு வந்த சோதனை..!
* முதல் போன்று இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து கூறட்டுமா..? : பிரபல நடிகை கேள்வி..!
* அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!
* சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்த முக்கிய அறிவிப்பு..!
Tags :-Kanaa Movie Motion poster released
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.