35,000 யூரோக்கள் ரொக்கப்பணம் Vincennes இல் ஞாயிற்றுக்கிழமை மே 13 ஆம் திகதி, துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. €35 000 lost Salon Antiquités-Brocante
இந்த பழைய நூதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் Salon Antiquités-Brocante 68 ஆவது வருடமாக பரிஸில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மே 13 ஆம் திகதி காலை தலைக்கவசம் அணிந்துகொண்டு வந்த சில கொள்ளையர்கள் துப்பாக்கியை காண்பித்து, பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
அங்கு வந்த கொள்ளையர்கள் இதன் நிர்வாகியிடம் பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தை திறக்கும்படி பணித்து, அதற்குள் இருந்த 35,000 யூரோக்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொள்ளையர்கள் பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
**Most Related Tamil News**
- கேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி!
- “என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை
- பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்!