மஹிந்தவுக்கு ரகசிய தகவல் கொடுத்த கரு : சபாநாயகரிடம் விசாரணை

0
825
karu jayasuriya given information mahinda keith noyahr abduction

(karu jayasuriya given information mahinda keith noyahr abduction)
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில், விரைவில் சபாநாயகரிடம் வாக்குமூலம் பெறப்படும்.

பொது நிர்வாக அமைச்சராக இருந்த கரு ஜயசூரிய, கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு தகவல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா!

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :