ETH சூரிச் புதிய மிரட்டல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறது

0
555
Zurich faces bullying allegations, Zurich faces bullying, Zurich faces, faces bullying allegations, bullying allegations, Tamil Swiss News, Swiss Tamil News

(Zurich faces bullying allegations)

மத்திய தொழில்நுட்ப நிறுவனமான ETH சூரிச்சில் உள்ள மருத்துவ பட்ட படிப்புகள் மேற்கொள்ளும் கால் பகுதியினர், தங்கள் கல்விசார்ந்த மேற்பார்வையாளர்களால் மோசமாக நடத்தப்படுவதாக கூறுகின்றனர். இதற்கான விசாரணை மூன்று பேராசிரியர்களிடம் திறக்கப்பட்டுள்ளது. இது போன்று கடந்த ஆண்டிலும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ETH ஜூரிச்சில் உள்ள அறிவியல் துறையின் (AVETH) அறிவியல் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் பங்கேற்ற மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், அவர்களின் பேராசிரியர்கள் ஒரு வழிகாட்டியாக செயற்படவிலை என்றனர். பொதுவான புகார்களாக, அவமானப்படுத்தப்படல், மரியாதை குறைவாக நடத்துதல், உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமை என்பன பதிவிடப்பட்டன.

AVETH ETH சூரிச்சில் உள்ள அனைத்து 4,100 டாக்டர் மாணவர்களுக்கும் ஒரு வினாப்பட்டியலை அனுப்பியது. இப்பல்கலைக்கழகம், உலகின் முதல் பத்து பல்கலைக் கழகங்களில் ஒன்றாக தொடர்ந்து பட்டியலிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“இளம் ஆய்வாளர்கள் எவ்வாறு அழுத்தத்தை கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று ETH சூரிச் நிறுவன பீடாதிபதி கூறினார்.

Zurich faces bullying allegations, Zurich faces bullying, Zurich faces, faces bullying allegations, bullying allegations, Tamil Swiss News, Swiss Tamil News

Tamil News Groups Websites