(Tamil Cinema producers opposes Vishal)
நடிகர் சங்கத் தலைவர் விஷாலை எதிர்த்து தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அதாவது, லைக்கா நிறுவத்துடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணத்தை விஷால் கூற வேண்டும் என்றும், தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்ததாக கூறும் விஷால் அவர்கள் யார் என்பதையும் சொல்ல வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ராஜன், ராதாரவி, டி. ராஜேந்தர், ஜே.கே ரித்தீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பாரதிராஜா பேசுகையில்.. :-
“தயாரிப்பாளர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. திரைப்படம் எடுப்பதற்கு சங்கத்தின் அனுமதி தேவையில்லை. திரைத்துறையில் முதலீடு செய்பவர்கள் தமிழர்கள், ஆனால் மற்றவர்களிடம் பிச்சை எடுக்கிறோம். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் மாற்றப்பட வேண்டும்” என்றார்.
முன்னாள் நிர்வாகி ராதாரவி கூறுகையில்.. :-
“தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்ததாக சொல்லும் விஷால் அவர்கள் யார் என சொல்லாதது ஏன். ஓராண்டில் அவர் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன் என்றுதான் சங்கத்தில் போட்டியிட்டார்.
தயாரிப்பாளர் சங்கம் தேவையா என்பதே கேள்வியாக உள்ளது. சங்கத்தின் விதிமுறைகளில் பல குளறுபடிகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்கத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
விஷால் பதவி விலக வேண்டும். வாக்குறுதியை மீறி தனது இரும்புத்திரை படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட்டுள்ளார் விஷால்.” என்றார் ராதாரவி.
தயாரிப்பாளர், நடிகருமான டி.ராஜேந்தர் கூறுகையில்.. :-
“எங்கே போனது ரூ.7 கோடி வைப்பு நிதி என்பதற்கு விஷால் தரப்பு பதில் சொல்ல முடியுமா..? பொதுக் குழுவில் கணக்கு கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை.
மூத்தவர்கள் பிரிந்து கிடப்பதால் தான் யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத கொடுமை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்தது.
லைக்காவுடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணத்தை விஷால் கூற வேண்டும். க்யூப் கட்டணத்தை குறைக்க ஸ்டிரைக் செய்தார் விஷால், ஆனால் அந்த கட்டணம் குறைந்ததா..?”
என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* வருத்தத்தில் தவிக்கும் மூக்கு நீள வாரிசு நடிகை..!
* படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!
* இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!
* புதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..!
* விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!
* இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..!
* வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..!
* நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..!
* ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!
Tags :-Tamil Cinema producers opposes Vishal
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
‘ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாவே!’ 17ஆவது முறையாக கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் உலா வந்த ஐஸ்