தலவாக்கலையில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாகத் தீக்கரை

0
641
sudden fire accident Thalawakalai house full fire

(sudden fire accident Thalawakalai house full fire)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தலவாக்கலை ஒலிரூட் பிரதேச பகுதியில் இன்றைய தினம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.

இந்த தீ விபத்தை அடுத்து, குறித்த வீட்டில் இருந்த தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் தற்காலிகமாக உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும் மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது, வீட்டில் யாரும் இல்லை எனவும், தீ பரவிய நிலையில அயலவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதிலும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடிவில்லை.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இதுதொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிவதற்கான மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; sudden fire accident Thalawakalai house full fire