(Decision Today Bus charge revision)
பஸ் கட்டண திருத்தம் குறித்து தீர்மானிப்பதற்கு நிபுணர் குழுவொன்று இன்று மாலை கூடவுள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் அஷொக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 20 வீதத்தால் உயர்த்தப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் நேற்றைய தினம் வலியுறுத்தியுள்ளனர்.
ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 15 ரூபாவாக உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுதொடர்ப்பாக உடனடி தீர்வு எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் குறிப்பிட்டிருந்தன.
மேலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மீனவர்களும் இன்று கடலுக்கு செல்ல மறுத்துள்ளனர்.
எரிபொருளின் விலை அதிகரிப்பு காரணமாக அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீன்வர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையில் நாளைய தினம் யோசனையொன்று சமர்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- உயிரைப் பணயம் வைத்து தாயகம் திரும்பும் ஈழத் தமிழர்கள்
- மயிலைப் பார்க்க சென்ற சிறுவர்களுக்கு கிடைத்த மனித எச்சங்கள்
- எரிபொருள் விநியோகிக்காத 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- தலவாக்கலையில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாகத் தீக்கரை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Decision Today Bus charge revision