விமானத்தை போல கருப்புப் பெட்டியை சுமக்க தயாராகும் ரயில்கள்

0
656
black boxes rail coaches avert accidents

(black boxes rail coaches avert accidents)
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன.

இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து பயன்பாட்டில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் ஒரு திருப்பு முனையாக அமையும் என்று ரேபரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையின் பொது மேலாளர் கூறியுள்ளார்.

விமானத்தில் இருக்கும் கருப்புப் பெட்டியை விட, ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள கருப்புப் பெட்டி மிகவும் மேம்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. ரயிலில் இருக்கும் கருப்புப் பெட்டி, ரயில் தடம்புரளுதலை தடுக்க உதவுகிறது. ரயிலில் இருக்கும் பல்வேறு அம்சங்களை தொடர்ந்து கண்காணிக்க பயன்படுகிறது.

வழக்கமான செயல்பாடுகளில் இருந்து, ரயில் மாறுபட்டால் உடனே ஓட்டுநரை எச்சரிக்கை செய்துவிடும். இந்த கருப்புப் பெட்டியில் சிசிடிவி கேமரா, Video Output, பயணிகள் தகவல், Wifi உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

black boxes rail coaches avert accidents