(19 Facebook friends arrested hikkaduwa wewala)
ஹிக்கடுவ வெவல பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(13) அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான சிலர் இணைந்து போதைப்பொருள் மற்றும் மதுபான விருந்து நடத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விஷப் போதைப்பொருள் என கருதப்படும் 16 லொலிபொப்கள், 50 கிராம் கொக்கேய்ன் மற்றும் 9 கிராம் கேரள கஞ்சாவையும் தம்வசம் வைத்திருந்த 4 இளைஞர்களும், 3 யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் மேலதிக விசாரணைக்காக ஹிக்கடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏனைய 12 பேரும் பொலிஸாரால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் 7 பேரும் நேற்று காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அம்லங்கொடை – கொடகம நிகழ்வு மண்டபத்தினுள் இடம்பெற்ற பேஸ்புக் நண்பர்கள் விருந்தில் கஞ்சா, அபின், ஹசீஸ், மற்றும் போதை மாத்திரைகளுடன் சமூக சீர்கேடுகளில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
பலபிட்டிய நீதவானிடம் பெற்றுகொண்ட ஆணைக்கு அமைய திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 200 – 250 பேர் அங்கிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
குறித்த விருந்தில் பங்கேற்க 3000 ரூபாய் செலுத்தி பற்றுச் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். பற்றுச் சீட்டு பெற்று கொள்ளாதவர்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. சுற்றிவளைப்பின் போது அதிகளவு இளம் பெண்களும் இருந்துள்ளனர்.இவ்வாறான விருந்துகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் பங்கேற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டிள்ளனர்.
50 பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இது குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி “பேஸ்புக் ப்ரெண்ட்ஸ்” என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் புவக்பிட்டிய பகுதியில் இரு நாட்களாக இரவு வேளைகளில் நடத்திய களியாட்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இக்களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட இப்பிரிவினர் போதையில் சுய நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் போதைப்பிரியர்களிடம் சமூகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் குளிசை வகைகள் இதன்போது பயன்படுத்தப்பட்டிருக்கலாமெனவும் போதை தரக்கூடிய பல வெளிநாட்டு உயர்தர மதுபான வகைகள் இங்கு கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரத்தினபுரி–அவிசாவளை வீதியிலுள்ள புவக்பிட்டிய பகுதியின் உல்லாச விடுதியொன்றில் இடம்பெற்ற இந்த களியாட்ட நிகழ்வின் அநாகரிக செயற்பாடுகளால் கோபமடைந்த இப்பிரதேச கிராம மக்கள் இவ்விடயத்தை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்ததையடுத்து இக்களியாட்ட விடுதி சுற்றி வளைக்கப்பட்டது
அத்துடன் இங்கு பயன்படுத்தப்பட்ட அதிக விலையுள்ள உத்தரவு பத்திரம் பெறாது விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் கைப்பற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- இலங்கையில் அதிர்ச்சி; மூன்றரை வயது குழந்தையை சீரழித்த முதியவர்
- பாடசாலை மாணவி காதலனுடன் தப்பியோட்டம்
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மற்றுமொரு சோகம்; இரத்த வெள்ளத்தில் இரண்டு வயது குழந்தை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags:19 Facebook friends arrested hikkaduwa wewala , 19 Facebook friends arrested hikkaduwa wewala