நெருப்பில் சிக்கிய நெருப்பை உமிழும் ரோபோ..!

0
657
united states dragon robot fires fire

(united states dragon robot fires fire)
அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த நெருப்பை உமிழும் டிராகன் ரோபோ ஒன்று நெருப்பில் சிக்கி அழிந்து போயுள்ள சம்பவமானது அங்குள்ள சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புளோரிடாவின் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காவில் இரும்பினால் செய்யப்பட்ட நெருப்பை உமிழும் டிராகன் ரோபோவே இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

இந்த டிராகன் அவ்வப்போது நடந்து சென்றும், சப்தமிட்டு, நெருப்பை உமிழ்ந்தும் பார்வையாளர்களை பரவசப்படுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று டிராகன் தலையில் வைக்கப்பட்டிருந்த வாயுக்குழாயில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்தனர். இதையடுத்து டிராகன் தற்காலிகமாக செயலற்று இருப்பதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

united states dragon robot fires fire