பாடசாலை மாணவி காதலனுடன் தப்பியோட்டம்

0
1490
school student escapes boyfriend

(school student escapes boyfriend)
திக்கும்புர பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாடசாலை நேரத்தில் தனது காதலனுடன் தப்பியோடியுள்ளார்.

திக்கும்புர நகருக்கு அருகிலுள்ள பிரசித்திபெற்ற பாடசாலையில் 11 ஆம் தர வகுப்பில் கல்விகற்கும் மாணவியொருவரே தனது காதலனுடன் தப்பியோடியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 10 ஆம் திகதி காலை பாடசாலைக்கு சென்ற குறித்த மாணவி, பாடசாலைக்கு முன்னால் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் பின்புறம் தனது பாடசாலை சீறுடையை கழற்றிவிட்டு, சாதாரண உடையணிந்து தனது காதலனுடன் தப்பியோடியுள்ளதாக இமதூவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தான் தனது காதலனுடன் தப்பிச்செல்வதாக தனது பெற்றோருக்கும் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த குறித்த மாணவியின் பாடசாலை அதிபர், இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மாணவியின் பெற்றோருக்கு மாணவி பாடசாலையை விட்டு வெளியேறும் சான்றிதழையும் கொடுத்துள்ளார்.

இந்த மாணவியும் அவளின் காதலனும் மணமுடிக்கும் வயதை எட்டவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; school student escapes boyfriend