இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்

0
6364
Removal LTTE name Interpol list

(Removal LTTE name Interpol list)

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதென சிங்களப் பத்திரிகையான திவயின கேள்வி எழுப்பியுள்ளது.

கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தாகவும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் 154 பேரை இன்டர்போல் பட்டியலில் இருந்து நீக்கியமை புதிராக உள்ளதாகவும் சிங்கள பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரமான தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளடங்க உறுப்பினர்கள் 154 பேரை இன்டர்போல் பட்டியலில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது யார் என்று இன்றுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவன் நெடியவன் மற்றும் விடுதலைப் புலிகளின் 37 தலைவர்களின் பெயர்கள் மற்றும் விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த ரி.ஆர்.ஓ அமைப்பின் தலைவன் ரெஜீயின் பெயரும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் மரணிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

‘திவயின’ பத்திரிகை இன்டர்போல் அமைப்பின் அதிகாரிகளிடம் இதுகுறித்து வினவியபோது, இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்களை இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட முடியும் என்றும் கூறியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, எமில்காந்தன் மற்றும் இன்னுமொரு புலி உறுப்பினரின் பெயர் மட்டுமே தற்பொழுது இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Removal LTTE name Interpol list