கர்நாடக தேர்தல்: விஜயநகர் தொகுதியில் காங்கிரஸ் – பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்

0
618
Hand hybrid between Congress Party BJP i Karnataka

Hand hybrid between Congress Party BJP Karnataka

இந்திய கர்நாடகா மாநிலத்தில் பெங்களூர் விஜயநகர் ஹம்பி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதhக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.

ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால் ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 20.45 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

இந்த நிலையில், பெங்களூர் விஜயநகர் ஹம்பி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இரண்டு கட்சியினர் அங்கே அதிக அளவில் கூடியதால் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கைகலப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இரு கட்சியினரின் மோதல் காரணமாக அங்கே அதிக அளவில் பொலிஸ் வந்ததால் அங்கே உடனே பிரச்சினை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த மோதலில் ஈடுபட்ட சிலரை பொலிஸ் கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Hand hybrid between Congress Party BJP Karnataka

More Tamil News

Tamil News Group websites :