தனது பெயரை பயன்படுத்த கூடாதென திவாகரனுக்கு சசிகலா சட்டத்தரணி மூலம் மனு

0
552
Divakaran lawyer behalf Sasikala name photo Sasikala should used

Divakaran lawyer behalf Sasikala name photo Sasikala should used

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா பெயரையோ புகைப்படத்தையோ எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என சசிகலா சார்பில் அவரது சட்டத்தரணி மூலம் சகோதரர் திவாகரன் திவாகரனுக்கு மனு அனுப்பிவுள்ளார்.

குறித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தங்களின் தற்போதைய முரண்பட்ட செயல்பாடுகள் சசிகலாவை கனத்த மனதுடன் இந்த சட்ட அறிவிப்பை தங்களுக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளியுள்ளது. நீங்கள் உண்மைக்கு மாறாக காழ்ப்புணர்வுடன் இல்லாததையும் பொல்லாததையும் பொது வெளியில் பேசி வருவது சசிகலாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

‘சசிகலா இருட்டறையில் இருக்கிறார். எதுவுமே அவருக்கு தெரியாது. அரசியல் அனுபவம் அவருக்கு இல்லை. இனி வரும் காலங்களில் அவர் பொதுச்செயலராக செயல்பட மாட்டார். எல்லாம் முடிந்து விட்டது. கட்சியில் நடப்பது அவருக்கு தெரியாது. தினகரன் செயல்பாடுகளில். சசிகலாவுக்கு உடன்பாடு இல்லை என நீங்கள் கூறுவது உங்களின் வயதுக்கும் குடும்ப பின்னணிக்கும் தகுந்ததல்ல.

இறுதியாக சசிகலா தங்களுக்கு தெரிவித்துக் கொள்வது நீங்கள் எந்தவொரு பெயரிலும் அரசியல் ரீதியாக செயல்படுவது உங்களின் சொந்த விருப்பம் மற்றும் அடிப்படை உரிமை சார்ந்த விஷயம். ஆனால், சசிகலா பெயரையோ புகைப்படத்தையோ எந்த வகையிலும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது.

‘என் அக்கா என் உடன்பிறந்த சகோதரி’ என்ற உரிமையை கோரி சசிகலா குறித்து ஊடகங்களில் பேசி வருவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த அறிவிப்பிற்கு பிறகும் நீங்கள் பேசினால் இரத்த சம்பந்த உறவு என்பதை ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு சசிகலா தள்ளப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

Divakaran lawyer behalf Sasikala name photo Sasikala should used

More Tamil News

Tamil News Group websites :