இராணுவத்தளபதிக்கு அழைப்பாணை

0
518
army chief invite human rights council latest news lankan

army chief invite human rights council latest news lankan
ஒட்டுச்சுட்டான் – கற்சிலைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இராணுவத்தளபதி மற்றும் குறித்த இராணுவ முகாமின் படைத்தளபதி ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைகளுக்கு வருமாறு வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பரந்தன் வழியாக புதுகுடியிருப்பிற்கு செல்லும் வழியில் தனியார் காணி ஒன்றில் 64 ஆவது படைத்தளம் அமைந்துள்ளது.

குறித்த தனியார் காணியில் பௌத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த காணி தனியார் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமையவே குறித்த காணி மற்றும் காணியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
army chief invite human rights council latest news lankan

More Tamil News

Tamil News Group websites :