‘காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்’ – தமிழிசை

0
504
definitely create political change forthcoming elections

Tamilnadu BJP election politics Cauvery issue Leader Tamilisai said

“காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்” என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய கர்நாடக மாநில தேர்தலை காரணம் காட்டி இந்திய மத்திய அரசு காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டது. மேலும், கர்நாடாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டிருப்பதால் காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

“காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம். கர்நாடக தேர்தலுக்காக உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டோம். இதுபோன்ற அரசியலை அனைத்து கட்சிகளும் செய்கிறது. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலுக்காக அவகாசம் கேட்டோம், அரசியல் செய்தோம் என தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu BJP election politics Cauvery issue Leader Tamilisai said

more Time Tamil News Today

Time Tamil News Group websites :