(Stolen selection sheets students good result)
சிங்கப்பூரில், சென்ற ஆண்டுப் பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலை H2 வேதியியல் 3ஆம் தாள் தேர்வுக்கான 238 விடைத்தாள்கள் திருடுபோனதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலோ, நவம்பர் மாதத்திலோ மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில் , கடந்த மாதம் 36 மாணவர்கள் தேர்வை மீண்டும் எழுதியுள்ளனர். அவர்களில் மூவர் முன்னைவிடச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றதாகச் சிங்கப்பூர்த் தேர்வுகள், மற்றும் மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. அவர்கள் புதிய தேர்வு முடிவுத் தாளையும், சான்றிதழையும் பெறுவார் .
மேலும் , தேர்வை மீண்டும் எழுதிய மற்ற மாணவர்கள் அதே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இரு தேர்வுகளின் மதிப்பெண்ணில் சிறந்தது எதுவென்று , அவர்களது பொதுக்கல்வி மேல்நிலைச் சான்றிதழில் பதியப்படும். எனவே அவர்களின் தேர்வு முடிவுகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.
அதுமட்டுமல்லாமல் , இன்னும் 18 மாணவர்கள் வரும் நவம்பரில் தேர்வை மீண்டும் எழுதுவர்.
tags:-Stolen selection sheets students good result
most related Singapore news
இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com