பாலத்துக்கு அடியில் குழந்தை பெற்ற பெண்! – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு  உத்தரவு

0
682
woman born bottom bridge

incident happened Odisha woman born bottom bridge
இந்திய ஒடிசா மாநிலத்தில் பாலத்துக்கு அடியில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யானைகள் கூட்டம் தரைமட்டமாகியுள்ளது. இதனால் அவர் வீடு இல்லாமல் பாலத்துக்கு அடியில் வசித்து வந்துள்ளார். தனக்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அந்த பெண் அவர் தங்கியிருந்த பாலத்துக்கடியிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து, அந்த பெண்ணுக்கு உதவி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு  உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபற்றி ஜிலா பரிஷத் உறுப்பினர் கூறுகையில், எந்தவித உதவியும் அளிக்கப்படாததால் தான் இத்தகைய அவலம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

woman born bottom bridge

more Time Tamil News Today

Time Tamil News Group websites :