கேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்!

0
1448
Actor Dhanush Hollywood film screen Cannes Film Festival

மே 8-ம் தேதி தொடங்கிய 71வது கேன்ஸ் திரைப்பட விழா, 19-ம் தேதி வரை நடைபெறும். இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கங்கணா ரனாவத், ஹூமா குரேஷி, சோனம் கபூர், தீபிகா படுகோன் உட்பட பல நடிகைகள் பங்கேற்கின்றனர். Actor Dhanush Hollywood film screen Cannes Film Festival

பாலிவுட் நடிகைகளான கங்கணா ரனாவத் மற்றும் காலா பட நாயகி ஹூமா குரேஷி ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

இதில் பங்கேற்பதற்காக கங்கணா ரனாவத்தின் ஆடையை புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளரான சப்யாசாக்ஷி வடிவமைத்துள்ளார். ஹூமா குரேஷியின் உடையை வருண் பாஹ்ல் வடிவமைத்துள்ளார். அத்துடன், இவர்கள் இருவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இவர்களைத் தவிர கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினராக நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், தீபிகா படுகோன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

நடிகர் தனுஷ் முதல் முறையாக அவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir) திரைப்படம் கேன்ஸில் திரையிடப்படுகிறது.

மேலும், கேன்ஸ் சர்வதேச விழாவில் பங்கேற்பதால், காலாவில் நடித்த குரேஷியால் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**