‘குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? ” : யாழில் நடு வீதியில் யுவதி மீது சரமாரியாக தாக்குதல்

0
2226
unidentified persons attacked girl jaffna

குட்டைப் பாவாடை அணிந்து சென்ற யுவதி ஒருவரை இனந்தெரியாத இளைஞர்கள் நடுவீதியில் வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் உருப்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம்; தொடர்பில் தெரிய வருவதாவது,

உரும்பிராய்ப் பகுதியல் யுவதி ஒருவர் குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது இனந்தெரியாத இளைஞர்கள் இருவர், தொலைபேசியில் கதைத்தபடி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியின் தொலைபேசியை தட்டி விழுத்திய பின்னர் யுவதியை மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்கி தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.

குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? எனக் கேட்டே யுவதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :