திமுத் கருணாரத்னவுக்கு பதிலாக இலங்கை அணியில் இணைக்கப்படவுள்ள வீரர்!

0
730
Sri Lanka squad WI tour news Tamil
(Sri Lanka squad WI tour news Tamil)
இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜுன் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டித் தொடருக்கான 22 பேர் கொண்ட முதற்கட்ட குழாமிற்கான பயிற்சி நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று கண்டியில் ஆரம்பித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் உபாதைக்குள்ளாகியுள்ள திமுத் கருணாரத்ன நீக்கப்பட்டுள்ள்ளார். உள்ளூர் ஒருநாள் போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரின் இடது கையின் ஆள்காட்டி விரலில் பலத்த உபாதை ஏற்பட்டிருந்தது.
இலங்கை டெஸ்ட் அணியின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக திமுத் கருணாரத்ன திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு பதிலாக மட்டுப்படுத்த போட்டிகளில் சிறந்து விளங்கும் தனுஷ்க குணதிலக இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தனுஷ்க குணதிலக இலங்கை அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயிற்சியில் ஈடுபட்டு வரும் முதற்கட்ட அணிக்குழாமின் விபரம் இதோ…
தினேஷ் சந்திமால் (தலைவர்), எஞ்சலோ மெத்தியூஸ், குல் பெரேரா, குசால் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, ரொஷான் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, மஹேல உடவத்த, தசுன் சானக, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, ஜெப்ரி வெண்டர்சே, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகன், சுராங்க லக்மால், லஹிரு கமகே, லஹிரு குமார, செஹான் மதுசங்க, கசுன் ராஜித, அஷித பெர்னாண்டோ, நிஷால தாரக

<<Tamil News Group websites>>