பாலியல் தொல்லை என்பது சோடிப்பு – வகுப்பு மாறி அமர்ந்ததாலேயே பரிசோதித்தார்

0
544
tamilnews jaffna railway checkers woman abuse case

(tamilnews jaffna railway checkers woman abuse case)

அண்மையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வௌிநாட்டு பெண்ணொருவரை தகாத முறையில் நடத்தியதாக புகையிரத சேவை பணியாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் யாழ்ப்பாண பொலிஸாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார்.

“தொடருந்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண் பயணியிடம் புகையிர சேவை பணியாளர் முரண்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது – சோடிப்பு அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

குறித்த பணியாளர் விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.

நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணியும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான மு.றெமிடியஸ் மன்றில் இந்த வாக்குமூலத்தை சமர்ப்பணம் செய்தார்.

பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் புகையிரத பணியாளருக்கு எதிராக முதல் அறிக்கையை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.

இதன்போதே சந்தேகநபரின் சட்டத்தரணி இந்த விடயத்தை மன்றில் தெரிவித்து, அவரைப் பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தார்.

அதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

(tamilnews jaffna railway checkers woman abuse case)

More Tamil News

Tamil News Group websites :