பிரான்ஸுக்குள் போக்குவரத்து தடை!

0
694
SNCF strike continue 3rd day May 9th

SNCF தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பு திங்கள் தொடங்கி இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. இதனால், இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்து தடை ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SNCF strike continue 3rd day May 9th

ரயில் சேவைகளில் இரண்டில் ஒரு TER சேவையும், இரண்டில் ஒரு TGV சேவையும் மற்றும் மூன்றில் ஒரு Intercity சேவையும் இடம்பெறும். மேலும், சர்வதேச ரயில் சேவைகளில், இரண்டில் ஒரு ரயிலும் சேவையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Transilien சேவைகளும் இரண்டில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இல்-து-பிரான்சுக்குள் RER A மாத்திரம் வழமை போல் இயங்கும் எனவும், இரண்டில் ஒரு RER B, மூன்றில் ஒரு RER C, ஐந்தில் இரண்டு RER D (Nord) மூன்றில் ஒரு RER D (Sud) யும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிமாகாணங்களை இணைக்கும் TGV சேவைகளில் 50 வீதம் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**