இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

0
863
malaysia 14 general election today, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

{ malaysia 14 general election today }

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தல் இன்று நடையப்பெறுகின்றது. அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பொதுத்தேர்தலில் இம்முறை தேசிய முன்னணிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

14,940,624 பதிவு பெற்ற வாக்காளர்களில் 14,449,200 வாக்காளர்கள் காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரையில் வாக்களிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள வாக்காளர்கள் வெளிநாட்டிலிருந்து வர முடியாத மலேசியர்கள், அஞ்சல் வாக்காளர்கள், தொடக்கக்கட்ட வாக்காளர்கள் ஆகியோர் ஆவர்.

இம்முறை 222 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 505 சட்டமன்ற தொகுதிகள் ஆகியவற்றுக்கு சுமார் 2,333 பேர் போட்டியிடவுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் அன்று ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் போட்டியிடவிருந்த டாக்டர் ஸ்ரீராம் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்படாததால் அத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரும் மந்திரி பெசாரனுமான டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இன்று வாக்களிப்பதற்கு நாடு தழுவிய நிலையில் 8,253 வாக்களிப்பு மையங்களில் 28,115 வாக்களிப்பு முகப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags: malaysia 14 general election today

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

<<Tamil News Groups Websites>>