என்னை விடுங்கள் அப்பா : கெஞ்சியும் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை

0
693
father molested 13 year girl Hyderabad latest gossip

(father molested 13 year girl Hyderabad latest gossip )

பெண் பிள்ளைகளை எப்பொழுதும் காம நோக்கோடும் பார்க்கும் காம பிசாசுகள் இருக்கும் வரை இந்த உலகில் இது போன்ற குற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கும் .

ஹைதராபாத்தில் தனது கணவனை இழந்த பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்த்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் இறந்த முதல் கணவனுக்கு ஒரு பெண் குழந்தை இருகின்றது .13 வயது நிரம்பிய இந்த பெண் கடந்த வருடம் தான் பருவ வயதை எட்டியுள்ளார் .

இந்நிலையில்  சிறுமியின் தாய் பணிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மாற்றாந்தந்தை பலாத்காரம் செய்தார். மேலும் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று்ம அப்படி சொன்னால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் தனது தாயிடம் இந்த கொடுமையை சொல்ல அந்த சிறுமி மிகவும் பயந்தார்.

இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து வேலைக்கு சென்ற தாயிடம் தன்னை விட்டு எங்கும் போக வேண்டாம் என்று அழுது கொண்டே நடந்தவற்றை கூறினாள். இதையடுத்து தனது கணவனிடம் சிறுமியை வைத்துக் கொண்டே தவறாக நடந்து கொண்டது குறித்து கேட்டபோது சிறுமி பொய் கூறுவதாக அந்த நபர் தெரிவித்தார்.

மேலும் மது போதையால் இப்படி செய்து விட்டேன் இனி இது போல் செய்ய மாட்டேன் என கூறியதை தாயும் சிறுமியும் நம்பினார்கள் .பின்னர் தாய் வேலைக்கு சென்ற பின் மீண்டும் சிறுமியை பலாத்காரம் செய்து பெல்டால் அடித்து உதைத்தார்.மேலும் உதவிக்காக கத்திய போது யாரும் முன்வர வில்லை .மேலும் சிறுமியை  இதை தாயிடம் சொல்லகூடாது என மிரட்டினார் .

அவரின் நடத்தையில் சந்தேக பட்டு சிறுமியிடம்  அந்த தாய் நடந்தவற்றை கேட்டபோது சிறுமி அனைத்தையும் கூறினார்.

உடனடியாக இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே சிறுமியின் தாய்க்கு போன் செய்து தன் மீதான புகாரை வாபஸ் வாங்குமாறும் சிறுமியின் பெயரில் பணம் அனுப்புவதாகவும் கூறியிருந்தார். இந்த செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதனிடையே அந்த சிறுமி குழந்தைகள் உரிமை ஆணையத்தை அணுகி எனக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை. நான் வீட்டில் இருந்தால் இதுபோல் மீண்டும் மீண்டும் சம்பவங்கள் நடக்கலாம். அப்பா இது போல் செய்யாதீர் என்று நான் கூறியும் அவர் கேட்கவில்லை. நான் ஹாஸ்டலில் தங்கி நன்கு படித்து ஒரு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்தை அடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:father molested 13 year girl Hyderabad latest gossip