ஐபோன் பயன்படுத்தாத ஆப்பிள் பங்குதாரர்

0
763
buffett owns 5 percent apple

(buffett owns 5 percent apple)
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் தயாரிப்புக்கள் என்றாலே அதனை வாழ்நாளில் ஒருமுறையேனும் பயன்படுத்திவிட வேணடும் என்ற எண்ணம் கொண்டோரும் உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான வாரென் பஃபெட் தான் ஐபோன் பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார். பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் தலைவரும் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரருமான இருப்பவர் வாரென் பஃபெட். உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் 3வது இடத்தில் உள்ளவர்.

இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, “எனக்கு புதிய தொழில்நுட்பங்கள் சரியாகப் புரிவதில்லை” என்றார். மேலும், “நான் ஆப்பிள் போன் பயன்படுத்தவில்லை. பழைய ஃபிளிப் போன் தான் பயன்படுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.

“ஆப்பிள் நிறுவனத்தில் இப்போது 5 சதவீதம் பங்குகளை மட்டுமே என் வசம் உள்ளது. இது 6 அல்லது 7 சதவீதமாக உயரலாம். ஆனால், 100 சதவீதம் பங்குகளையும் வைத்திருக்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை” என்றும் வாரென் தெரிவித்துள்ளார்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

buffett owns 5 percent apple