யாழ். மக்களின் சிந்தனையில் இருப்பது என்னவென்று தெரியுமா? : கூறுகிறார் யாழ். கட்டளைத் தளபதி

0
959
tharshana krttiyarachchi jaffna

(tharshana krttiyarachchi jaffna)
தென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் எனும் சிந்தனை வட பகுதி மக்களிடம் உள்ளது என இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வறியவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வட பகுதி மக்களுக்கும், தென்பகுதி மக்களுக்கும் இடையிலான நல்லுறவு சிதைக்கப்பட்டதாகவும் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தில் வட பகுதி மக்கள் மாத்திரம் அன்றி தென்பகுதி மக்களும் பெரிதும் துன்பப்பட்டனர்.

நாட்டையும், மக்களையும் பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட பிரிவினைவாதத்துக்கு எதிராக இராணுவம் போராட நேர்ந்ததாக கூறிய அவர் அதற்காக தமிழ் மக்களை எதிரிகளாக ஒருபோதும் தென்பகுதி மக்களும் சரி, இராணுவமும் சரி எண்ணவே இல்லை.

நல்லிணக்க வேலைத் திட்டங்களையே இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் முன்னெடுத்து வருவதாகவும் இதனை தேர்தல் நோக்கத்துக்காகவோ, அரசியலுக்காகவோ செய்யவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:tharshana krttiyarachchi jaffna, tharshana krttiyarachchi jaffna