விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!

0
640
sunrisers hyderabad beat royal challengers bangalore 2018

(sunrisers hyderabad beat royal challengers bangalore 2018)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முக்கியமான போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி தோல்வியடைந்து பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி நேற்றைய போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி தங்களது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஹைதராபாத் அணி சார்பில் வில்லியம்ஸன் 56 ஓட்டங்களையும், சகிப் அல் ஹசன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சௌதி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பெங்களூர் அணிசார்பில் அதிகபட்சமாக கோஹ்லி 39 ஓட்டங்களையும், கிராண்டோம் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சகிப் அல் ஹசன் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் அடிப்படையில் பெங்களூர் அணி தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளதுடன், ஹைதராபாத் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

<<Tamil News Group websites>>