பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!

0
759
peanut butter bottle Screw

(peanut butter bottle Screw)

சிங்லோங் பீனட் பட்டரின் ஒரு போத்தலில் இரும்புத் திருகாணி இருந்ததால், அந்த உணவுப் பொருளின் குறிப்பிட்ட தொகுப்புகள் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

பீனட் பட்டரில் ஏதோ ஒரு பொருள் கலந்திருப்பதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ  ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, மற்றும் பீனட் பட்டர் உற்பத்தி செய்யப்பட்டபோது அதில் இரும்புத் திருகாணி கலந்திருக்கலாம் என்று விசாரணை முடிவில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 340 கிராம் பீனட் பட்டர் போத்தல்கள் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டன.  அவற்றை 2019 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று போத்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தேதி குறிப்பிடப்பட்ட பீனட் பட்டர் போத்தல்களை வாங்கியோர் அதைச் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையளர்கள் தங்கள் போத்தல்களை மாற்றவும், பணத்தை திரும்பப் பெறவும் 6284 5254 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது nya01@singlong.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

tags:-peanut butter bottle Screw

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**