Olya Langille
இரவு முழுவதும் மது, போதைப்பொருள் மற்றும் பாலுறவு , யுவதியொருவரின் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்த சோகம் புளோரிடாவில் இடம்பெற்றுள்ளது.
ஒலியா லங்கைல் என்ற 18 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி மருத்துவரொருவரின் இல்லத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வளர்ந்து வரும் மொடல் அழகியான அவர் , குறித்த மருத்துவரை விடுதியொன்றில் சந்தித்துள்ளார்.
மருத்துவரின் இல்லத்துக்கு சென்று அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்
இருவரும் சம்மதத்துடனேயே உறவில் ஈடுபட்டதாக குறித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவரின் படுக்கையிலேயே உறங்கியுள்ளார். அடுத்த நாளை மருத்துவர் அவரை எழுப்பும் போது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் அதிகளவில் உட்கொள்ளப்பட்டமையே மரணத்துக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் உடலில், கொக்கேய்ன், எகஸ்டலி, பென்டால்யல் மற்றும் ஷனெக்ஸ் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உடற்கூற்று பரிசோதனையின் போது இவை தெரியவந்துள்ளன.
இம்மரணத்தில் எவ்வித சந்தேகங்களும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் யுவதியின் உறவினர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர்.